வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய 2 ஆயிரம் முன்கள தன்னார்வலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளதாகவும்,கொரோனா தொற்றுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி மற்றும் அவரது குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு என்றும் தெரிவித்துள்ளது.இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் உள்ள நபர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ள சென்னை மாநகராட்சி கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.இதை மீறும் பட்சத்தில், முதல்முறை 2 ஆயிரம் ரூபாய் அபராதமாக மண்டல அமலாக்கப் பிரிவின் மூலம் வசூலிக்கப்படும் என்றும்,இரண்டாவது முறையாக மீறினால், மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் எச்சரித்துள்ளது.