5 கோடி கொரோனா தடுப்பூசிகளுக்கு டெண்டர்; 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய அளவில் தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

Update: 2021-05-15 12:59 GMT
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்திற்கு போதுமான அளவு தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கப்படவில்லை. எனவே, தமிழகத்தில்18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து உலகளாவிய அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பில், 5 கோடி தடுப்பூசிகளை, 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், டெபாசிட் தொகையாக 2 கோடி ரூபாய்
செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்