மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கு- சிபிஐ வாதம்

Update: 2024-09-19 00:51 GMT

மைக்கேல்பட்டி பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆவணங்கள் இருப்பதாக சிபிஐ தரப்பில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி லாவண்யா, மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நன்றாக படிக்கும் மாணவியை பிற வேலைகளைச் செய்ய வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத மாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்றும், குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்யக்கூடாது என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்