தலைவி படத்திற்கு தடை கோரி வழக்கு - வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள்

தலைவி படத்திற்கு தடை கோர ஜெ.தீபாவிற்கு உரிமை இல்லை என இயக்குனர் ஏ.எல்.விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-02-09 14:49 GMT
தலைவி படத்திற்கு தடை கோர ஜெ.தீபாவிற்கு உரிமை இல்லை என இயக்குனர் ஏ.எல்.விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி என்ற திரைப்படமும், குயின் என்ற இணையதள தொடர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலைவி என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே திரைப்படம் எடுத்துள்ளதாகவும், தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தலைவி பட இயக்குநரான விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. படத்தை வெளியிடும் முன்பு தங்களுக்கு காட்சியிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கும் இயக்குநர் விஜய் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்