கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளை - சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளை கும்பல்
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லை பிடாரி அம்மன் கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில் விசாரணை நடத்திய போது சிசிடிவி கேமரா காட்சிகளும் கைப்பற்றப்பட்டது. அதில் மர்ம நபர் ஒருவர் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை பையில் அள்ளி போட்டு செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. நகரின் மையப்பகுதியில் இருந்த ஒரு கோயிலில் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.