அப்படியே முழுசா ரூ.1.5 லட்சம் ஐபோன்... தமிழகத்தில் மோசடியில் இது புது ரகம் -iPhone பிரியர்களே உஷார்
- சென்னையில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் போனை டெலிவரி மேனே, திருடிவிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.. விரிவாக..
- வீடு, நிறுவனம் போன்றவற்றை காலி செய்வதற்கு, பொருட்களை இடம் மாற்றிக் கொடுபதற்கும் போர்டர் என்ற தனியார் டெலிவரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- சிட்டி லிமிட்டுக்குள், உடனடியாக ஒரு பொருளை டெலிவரி செய்வதற்கு, டெலிவரி பாய்களும் இருக்கிறார்கள்.
- ஆன்லைனில் புக் செய்தால் நம் வீட்டிற்கு தேடி வரும் டெலிவரி பாய், நாம் கொடுக்கும் பொருளை சேர்க்க வேண்டிய இடத்தில் கணகட்சிதமாக சேர்த்து விடுவார்கள். இந்த அரிய வாய்ப்பு சென்னை வாசிகளுக்கு வரபிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.
- காலேஜுக்கு போன கேர்ள்ஃபிரன்டுக்கு, அவசரமாக பர்த்டே கிஃப்ட் கொடுக்க வேண்டும்.
- ஆஃபிஸ்க்கு போன ஹஸ்பண்டுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்.
- மறந்து வீட்ட்டில் விட்டு வந்த கோப்புகளானாலும், லேப்டாப் ஆனாலும், மீட்டிங் ஆரம்ப்பதற்கு முன் சேஃபிடியாக கொடுக்க வேண்டும்.
- இப்படி பர்சனல் தேவைகள் எதுவா இருந்தாலும், டிராஃபிக்கில் அலையாமல் போர்டரில் அனுப்பி வைப்பது சுலபமாக இருந்தது.
- இதனால் கம்ர்சியல் நிறுவனங்களும், தங்களோட ட்ரான்ஸ்போர்ட் சர்வீஸ்க்கு இந்த போர்டர் ஆப்பை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
- அப்படி போர்டரில் ஐஃபோன அனுப்பி வைத்த செல்ஃபோன் கடை மேலாளர், இப்போது 1.5 லட்சம் மதிப்புள்ள ஃபோனை கண்டு பிடித்து கொடுக்கச் சொல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
- சென்னையில் பிரபலமான செல்ஃபோன் நிறுவனங்களில் ஒன்று பிரியதர்சனி செல் யுனிவர்சல்.
- 18 கிளைகளை கொண்டு இயங்கி வருவதால் , ஒரு பிராஞ்சில் இருந்து இன்னொரு பிராஞ்சிற்கு அடிக்கடி செல்ஃபோன்களை அனுப்பி வைப்பது வழக்கம்.
- பனியாளர்களிடம் கொடுத்து அனுப்பினால் வேலை பாதிக்கப்படும் என்பதால் போர்ட்ர ஆப்பில் புக் செய்து அனுப்பினால், அவர்கள் அடுத்த சில மணி நேரத்தில்
- கொண்டு சேர்த்து விடுவார்கள். பல வருடங்களாக இதே முறையில் தான் மொபைல் போன்களை கடை மேலாளர்கல் அனுப்பி வருகிறார்கள்.
- அப்படித்தான் சம்பவத்தன்று மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள கிளையில் இருந்து.
- மற்றொரு பிராஞ்சிற்கு ஐஃபோன் ஒன்றை அனுப்ப வேண்டி இருந்ததால்.போர்டரை புக் செய்திருக்கிறார். அப்போது மேற்கு வங்கத்தை சேந்த மத்தியூர் ரகுமான் என்ற இளைஞர் டெலிவரி எடுப்பதற்காக வந்திருக்கிறார். அவரது அடையாள அட்டை அனைத்தையும் சரி பார்த்த பின்
- கடையில் இருந்து ஐஃபோனை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.
- ஃபோன வாங்கிக் கொண்டு போனவர்... போனவர் தான்.. சிறிது நேரத்தில் அவரது செல்ஃபோன் அனைத்து வைக்கப்படிட்ருக்கிறது. இரவு 10 மணியை கடந்தும் ஐஃபோன் சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்லவில்லை.