சத்தியமங்கலம் பகுதியில் மக்காச்சோளங்களை உலர வைக்கும் பணி மும்முரம்

கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் மக்காச்சோளங்களை சத்தியமங்கலம் பகுதியில் உள்ள உலர்களங்களில் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-10-30 06:58 GMT
கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் மக்காச்சோளங்களை சத்தியமங்கலம் பகுதியில் உள்ள உலர்களங்களில் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் மைசூர், சாம்ராஜ் நகர், குண்டல்பேட்டை, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மக்காச்சோளம்  பயிரிடப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் மக்காச்சோள அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால்  அங்கிருந்து விலை கொடுத்து வாங்கப்பட்ட மக்காச்சோளங்களை வெயிலில் இரண்டு நாள் காய வைக்கும் வியாபாரிகள், மக்காசோளத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவு 40 சதவீதமாக குறைக்கப்பட்ட பின்னர், பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோழி தீவன ஆலைகள் மற்றும் கோழிப் பண்ணைகளுக்கு விற்பனைக்கு  அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மக்காச்சோளம் கிலோ 25 ரூபாய் வரை  விற்பனையான நிலையில்,  இந்த ஆண்டு கிலோ 15 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதாக மக்காச்சோள வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்