"மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்" - நாடாளுமன்றத்தில் வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று அத்தொகுதி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று அத்தொகுதி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு நகர்ப்புற அமைச்சர் ஹர் தீப் சிங் பூரி அளித்துள்ள பதிலில் 2016 ல் அறிவிக்கப்பட்ட மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 977 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட 14 திட்டங்களில் 12 கோடி ரூபாய் செலவிலான ஒரு திட்டம் முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மற்ற திட்ட பணிகளை துவங்க வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும்,
அவை 5 ஆண்டுகளில் முடிவடையுமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியதாக வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.