"நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு காங்கிரஸ் ஆதரவு" - காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-14 09:49 GMT
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். சூர்யா பேசியதில் நீதிமன்ற அவமதிப்பு இல்லையெனவும் டுவிட்டரில் கருத்து  பதிவிட்டுள்ளார்.  உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் வலிந்து அழைத்தும் கொரோனாவிற்கு பயந்து நீதிமன்றங்களுக்கு வர மறுத்து விட்டதாக கூறியுள்ளார். அவர்களை நீதிமன்றத்திற்கு பயமின்றி வாருங்கள் என்று நீதியரசர் சுப்பிரமணியன் உத்திரவிட முடியுமா? என்றும், பாவம் மாணவர்கள் என்று சூர்யா சொன்னதில், நீதிமன்ற அவமதிப்பு இல்லையென்று பீட்டர் அல்போன்ஸ் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்