ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மோசடி - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

கரூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பண மோசடி செய்த 2 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-30 11:46 GMT
கரூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ள ஸ்ரீதர் மற்றும் அலுவலக உதவியாளர் அருள்முருகன் ஆகியோர் பண மோசடி செய்வதாக புகார் எழுந்தது. ஊழியர்களின் பொது ஓய்வூதிய பங்களிப்பு தொகை 7 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை இருவரும் மோசடி செய்தது உறுதியானது. இதுதொடர்பாக கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே குளித்தலை நகராட்சியில் பெண் கணக்காளர் ஒருவர் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த நிலையில் இப்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்