அனுமதியின்றி ஒட்டப்படும் சுவரொட்டிகள் - அப்புறப்படுத்திய ஆயுதப்படை போலீசார்

புதுக்கோட்டையில் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அப்புறப்படுத்தி தூய்மை செய்யும் பணியில் ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Update: 2020-08-16 10:40 GMT
தமிழகத்தில் தற்போது பிளக்ஸ் பேனர் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வால்போஸ்டர் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது.  சுவர் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமலேயே அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பலரும் போஸ்டர் அச்சடித்து சுவர்களில் ஒட்டி வருகின்றனர். அந்த வகையில்,புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே  காவல் துறைக்கு சொந்தமான சுவர்களில் பலர் சுவரொட்டிகளை ஒட்டி சென்றுள்ளனர். இந்நிலையில், அந்த போஸ்டர்களை காவலர்களை கழித்து சுவர்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். வேறு பணியாளர்களை பயன்படுத்தாமல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக காவல் துறையினரே சுவரை சுத்தம் செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்