"கல்லூரிகளில் இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கு செமஸ்டர் ரத்து" - முதலமைச்சர் பழனிசாமி

அனைத்து கல்லூரிகளிலும், இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-07-23 07:47 GMT
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவர்கள் நலன் கருதி, பல்கலைக் கழக மானியக் குழு(UGC), அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) வழிகாட்டுதலின்படி மதிப்பெண் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  கலை மற்றும் அறிவியல் மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப்படிப்பில்,  முதல் மற்றும் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், முதலாமாண்டு முதுகலை மாணவர்கள்,  இளநிலை பொறியியல் படிப்பில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள்,  முதுநிலை பொறியியல் படிப்பில் முதலாமாண்டு மாணவர்கள்,  எம்.சி.ஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த பருவத்தேர்வில் இருந்து விலக்கு அளித்து  அடுத்த கல்வி ஆண்டிற்கு செல்ல அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்த விரிவான அரசாணையை உயர் கல்வித்துறை வெளியிடும் என செய்தி குறிப்பில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்