பழைய நாணயங்களை கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம்!ஆசை காட்டி மோசம் செய்த கும்பலை கொத்தாக தூக்கிய போலீஸ்

Update: 2024-09-18 17:22 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த திலீப் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பழைய நாணயங்களைக் கொடுத்தால் அதிக பணம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்து இருக்கிறார். இதனைப் பார்த்த வாழப்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிசாமி தன்னிடம் இருந்த 2, 5 ரூபாய் நாணயங்களைப் போட்டோ எடுத்து திலீப்பிற்கு அனுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி அனுப்பிய நாணயத்தின் மதிப்பு 36 லட்சம் ரூபாய் எனவும் ஆனால் இதனை மாற்ற பல்வேறு சான்றுகளைப் பெற வேண்டும் எனக் கூறி இருக்கிறார் திலீப். இதனை உண்மையென நம்பிய பழனிச்சாமி சுமார் 4 லட்சம் ரூபாய் அனுப்பி இருக்கிறார். ஆனால், அதன்பின் திலீப் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததால் அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து திலீப் மற்றும் அவருடைய மனைவி ஷவாரியாபானு உட்பட மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்