17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு விழா

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களை சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கின்றனர்.

Update: 2020-07-22 03:16 GMT

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களை சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. 

இந்திய, அமெரிக்க வர்த்தக கவுன்சில் சார்பாக இன்று 'ஐடியாஸ்' உச்சி மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரை



இன்று நடைபெற உள்ள இந்தியா, ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.  இந்திய-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு, பெருந் தொற்றுக்கு பிந்தைய பல்வேறு அம்சம் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. 

நாட்டின் 2வது பிளாஸ்மா வங்கி - சென்னையில் இன்று செயல்பாட்டுக்கு வருகிறது 



டெல்லிக்கு அடுத்தபடியாக நாட்டில் 2வது பெரிய பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.  2 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்மா வங்கியை  இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைக்க உள்ளார். 

கர்நாடகாவில் ஊரடங்கு இல்லை - எடியூரப்பா அறிவிப்பு



கர்நாடகாவில் இன்று முதல் இனி எந்தப் பகுதியிலும் முழு ஊரடங்கு கிடையாது என முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் கடந்த 14ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைவதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனாவை தடுக்க மக்கள் அரசுக்கு துணையாக நிற்க வேண்டும் என்றும், முகக் கவசம் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

முதுகலை மருத்துவ படிப்பு - முக்கிய அறிவிப்பு



முதுகலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு உத்தரவு பெற்ற மாணவர்கள், சேர விருப்பமில்லை எனில் இன்று பிற்பகல் 3 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என மருத்துவ கல்வி செயலாளர் அறிவித்துள்ளார். தவறினால் முதுகலை படிப்பை தேர்வு செய்த மாணவர்கள் 15 லட்சம் ரூபாயும்,  டிப்ளமோ படிப்பை தேர்வு செய்த முதுகலை மாணவர்கள் 10 லட்சம் ரூபாயும் அபராத தொகையாக செலுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்