கொரோனாவிற்கு புலியூர் நாகராஜன் உயிரிழப்பு - முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் என்பதால் பரபரப்பு

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்தவர் திருச்சியைச் சேர்ந்த புலியூர் நாகராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.;

Update: 2020-07-03 08:01 GMT
கடந்த 26ம் தேதி திருச்சி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த விவசாய சங்க பிரதிநிதிகள் குழுவில் புலியூர் நாகராஜனும் இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து, முக்கொம்பு மேலணை புதிய கதவணை கட்டும் பணியை பார்வையிட்ட போதும் உடனிருந்தார். அன்று மாலையே அவருக்கு கடுமையான உடல்வலி மற்றும் சோர்வு ஏற்பட்டுள்ளது. பின்னர், தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் அதிகரித்ததை தொடர்ந்து, அது கொரோனா அறிகுறி எனக் கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று, காலை புலியூர் நாகராஜன் உயிரிழந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்