"சசிகலா பினாமி பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்க அதிக ஆதாரங்கள் உள்ளது" - வருமான வரித்துறை துணை இயக்குநர் தகவல்

சசிகலா பினாமி பரிவர்த்தனை ஈடுபட்டதாக சந்தேகிக்க அதிக ஆதாரங்கள் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-06-28 10:17 GMT
பண மதிப்பிழப்பு அறிவிப்பின் போது, பழைய ரூபாய் நோட்டுக்களைக்கொண்டு ஆயிரத்து 674 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா தரப்பு வாங்கியது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது. இதற்கான ஆவணங்களும் 2017ல் சசிகலா இல்லத்தில் நடந்த சோதனையின் போது சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள சசிகலா, பணமதிப்பு இழப்பின் போது, தன்னிடம் 48 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததாகவும், ஆயிரத்து 911 கோடி ரூபாய் மூன்றாம் நபர்களுக்கு சொந்தமானது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த நேரத்தில் பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தார். சசிகலாவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த வருமான வரித்துறை துணை இயக்குனர், ரொக்கம் யாருக்குச் சொந்தம் என்பது கவலையில்லை எனவும் குறிப்பிட்ட பினாமி பரிவர்த்தனையில்  ஈடுபட்டதாக அதிக ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்