ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள், அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-06-23 12:54 GMT
ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள், அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்த உத்தரவை எதிர்த்த வழக்கு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது, பேரிடர் மேலாண்மைக்காக மட்டுமே பேரிடர் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்க தடை விதித்தது தவறு என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 
இதையடுத்து, ஆன்லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது, அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்குகள் தொடர்பாக, ஜூன் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்