"செவிலியர்கள், மருத்துவர்கள் கொரோனா சேவையில் முன் நிற்கின்றனர்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் இறப்பு விகிதம் குறித்து அரசு வெளிப்படை தன்மையோடு அனைத்து விபரங்களையும் வெளியிட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2020-06-14 09:17 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் இறப்பு விகிதம் குறித்து அரசு, வெளிப்படை தன்மையோடு அனைத்து விபரங்களையும் வெளியிட்டு வருவதாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிக்களுக்காக பிரத்யேகமாக 200 படுக்கைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட  மாவட்டங்களில் முழுஊரடங்கு அமல்படுத்துவதா என்பது குறித்து முதலமைச்சர் உரிய முடிவெடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்