விவசாய தோட்டத்தில் வீணாகும் கத்தரிக்காய் - பயிர் செய்த விவசாயிகள் கவலை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திட்டக்குடி பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நிலத்தில் காய்கறி தோட்டங்கள் பயிர் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திட்டக்குடி பகுதியில் உள்ள சிறுவரப்பூர், பெருவரப்பூர், ஓட்டிமேடு, பெருந்துறை, உள்ளிட்ட கிராமங்களில் 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நிலத்தில் காய்கறி தோட்டங்கள் பயிர் செய்து வருகின்றனர். கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வராமலும், விவசாய வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கத்திரிக்காய் செடியிலேயே அழுகி வீணாக போவதாகவும் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.