திருவண்ணாமலை: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடையடைப்பு -இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து திருவண்ணாமலையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து திருவண்ணாமலையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குப்பை வரி பல மடங்கு உயர்வு, பாதாள சாக்கடை வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட 4 விதமான வரிகளையும் ஒரே நேரத்தில் கட்ட வேண்டுமென்ற நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, போராட்டம் நடைபெறுகிறது. இதில், 33 சங்கங்களை சேர்ந்த அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.