இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விளம்பரம் - தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூனை தடை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2020-03-11 21:15 GMT
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மொபைல் அழைப்புகளின் போது, இருமலுடன் தொடங்கும் விழிப்புணர்வு விளம்பரம் வருகிறது.  இந்த விழிப்புணர்வு விளம்பரத்தை தடை செய்யக்கோரி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வழக்கறிஞர் சிவ. ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இருமலுடன் தொடங்கும் இந்த விளம்பரம் எரிச்சல் ஊட்டுவதாகவும்,  விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது போன்ற மனநிலைக்கு தள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்