குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-29 12:40 GMT
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் போராட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த போராட்டத்தின் எதிரொலி சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றார். 

* நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இஸ்லாமிய அமைப்பு சார்பில்  பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். 

* இதேபோல் காரைக்காலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

* திருவண்ணாமலையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்