காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. சோதனை...

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2020-02-24 03:20 GMT
திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவ்பிக் இருவரும் இந்த வீட்டில் தங்கி இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி பகுதியில் காஜாமைதீனின் இரண்டாவது மனைவியான இந்திரா காந்தி என்பவரது வீட்டிலும், பட்டாம்பாக்கம் பகுதியில் ஜாபர் அலி, பரங்கிப்பேட்டையில் அப்துல் சமது ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்