மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரு ஆசிரியர்களின் விடுதலை செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்,இரண்டு ஆசிரியர்களின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-21 10:02 GMT
அரசு பள்ளி ஆசிரியர்கள், நாகராஜன், புகழேந்தி விடுதலையை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, இரு ஆசிரியர்கள் விடுதலையை ரத்து செய்யக் கோரினார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ஆசிரியர்கள் இருவரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து ஆணையிட்டார். ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று கூறிய நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வருகிற 25ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்