முருகனின் சிறை அறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு : மார்ச் 2ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2020-02-17 20:53 GMT
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் சிறை அறையில் இருந்து செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதுகாப்பு போலீசார் இல்லாத காரணத்தால் ஆஜர்படுத்த முடியாததால் காணொலி காட்சி மூலம் முருகனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு முருகனை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்