"மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்திருப்பதால் அதிர்ச்சி"

நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளிகளை இருந்து வெறும் ஏழாயிரத்து 500 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

Update: 2020-01-30 19:03 GMT
2017 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வுக்கு  2018 ஆம் ஆண்டு மூவாயிரத்து 700 பேர் பதிவு செய்திருந்தனர். 2019 ஆம் ஆண்டு 19 ஆயிரத்து 500 பேர் பதிவு செய்திருந்தனர்.  இந்நிலையில், நீட் தேர்வுக்காக  அரசு தரப்பில் இருந்து நடத்தப்படும் வகுப்புகள் நிறுத்தப்பட்டிருப்பதால், இம்முறை நீட் தேர்வு எழுத 
வெறும் ஏழாயிரத்து 500 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்திருப்பது கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்