சிவகங்கை அருகே ஒரு கரும்பு ரூ.32,000க்கு ஏலம்

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவில் ஒரு கரும்பு 32 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

Update: 2020-01-17 18:21 GMT
மதகுபட்டி அருகே உள்ள பிடாரி அம்மன் பொன்னழகி அம்மனுக்கு பெண்கள் வெள்ளை சேலை கட்டி பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அவ்வாறு செலுத்திய தொட்டில் கரும்புகளை கோவில் வாசலில் கூடி பொங்கலிட்ட பின்னர், ஏலம் நடத்தப்பட்டது. அதில் முதல் கரும்பு 32 ஆயிரம் ரூபாய்க்கும் கடைசி கரும்பு  15 ஆயிரத்துக்கும் ஏலமிட்ட போது, போட்டி போட்டு பக்தர்கள் வாங்கி சென்றனர். அதேபோல் விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலும்பிச்சை பழம் ஒன்று 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்