உள்ளாட்சி தேர்தல் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிக்கை
மோசடிகளையும் முறைகேடுகளையும் தகர்த்து எரிந்து உள்ளாட்சி தேர்தலில் பெறப் போகும் வெற்றி, நாளைய நல்லாட்சிக்கான முன்னோட்டம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையின் உதவியுடன் மோசடி, முறைகேடு, அத்துமீறல்களை அரங்கேற்றி வெற்றி பெற்று விடலாம் என அதிமுக திட்டமிட்டு வருவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில், 76 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கூட்டணிக்கு சேர்த்திட வேண்டிய பெரும் பொறுப்பு தொண்டர்களுக்கு இருப்பதாக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நேரடி தேர்தலில் தில்லுமுல்லுகளை அரங்கேற்றும் ஆளும் அரசு, மறைமுக தேர்தலிலும் மோசடி செய்திட முயன்றிடும் என குறிப்பிட்டுள்ள அவர், அதனை முறியடிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.