ஆலந்தூர்: தடையை மீறி பேரணி - 10ஆயிரம் பேர் மீது வழக்கு

சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-12-29 06:20 GMT
சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக, 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலந்தூரில், நேற்று பிரம்மாண்ட தேசியக் கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் பேரணி நடத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, தடையை மீறி பேரணி நடத்தியதாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உள்பட 10 ஆயிரம் பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்