"சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்" - மனிதநேய மக்கள் கட்சி பேரணி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரியுள்ளார்.

Update: 2019-12-19 02:09 GMT
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரியுள்ளார். மாநிலங்களவையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற அதிமுகவும், பாமகவும் தான் காரணம் என கூறி முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடும் பேரணி சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்றது. மசோதாவுக்கு வாக்களித்த இரு கட்சிகளையும், தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்ற ஜவாஹிருல்லா, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, பஞ்சாப் மாநில அரசுகளை போல், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்க வேண்டும் என்றார். திராவிட இயக்கத்தின் களங்கமாக அதிமுக உள்ளது என்றும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்