சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபருக்கு வலைவீச்சு
சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் உடைத்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் உடைத்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சைதாப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் செல்வதற்குள், மர்ம நபர் தப்பி சென்ற நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.