குப்பநத்தம் அணையில் தண்ணீர் திறப்பு : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்துவைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் அணையில் இருந்து வேளாண் பணிகளுக்காக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தண்ணீரை திறந்துவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் அணையில் இருந்து வேளாண் பணிகளுக்காக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தண்ணீரை திறந்துவைத்தார். சம்பா சாகுபடி பணிகளுக்காக நீர்திறக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை ஏற்று, குப்பநத்தம் அணையின் முதல் மடை வழியாக இன்று முதல் 11 நாட்களுக்கு வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் செங்கம், கலசப்பாக்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரத்து 728 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.