"சந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் பணியாற்றும்" : இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன்

சந்திரயான்-2 ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

Update: 2019-10-09 22:48 GMT
சந்திரயான்-2 ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன் கூறியுள்ளார். விண்வெளி வாரவிழாவை ஒட்டி, திருவண்ணாமலையில் உள்ள கல்லூரியில், இரண்டு நாள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன், 'கோள்களின் வாசல், நிலவு' என்பதை கருவாக கொண்டு உலகம் முழுவதும் விண்வெளி வார விழா கொண்டாடப்படுகிறது என்றார். சந்திராயன்-2 ஆர்பிட்டர், இன்னும் ஏழரை ஆண்டுகளுக்கு நிலவை ஆராய்ச்சி செய்யும் என்ற அவர், மனிதனை நிலவுக்கு அனுப்பும் முன், பூமியைச் சுற்றிவரும் 'ககன்யான்' திட்டம் வெகுவிரையில் செயல்படுத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்