வடகிழக்கு பருவமழை எப்போது துவங்கும்? - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கன்னியாகுமரி, நெல்லை,மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள், வரும் 20ஆம் தேதிக்கு மேல் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை,மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.