ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் - அன்னபூரணி கோலத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாள் பர்வதவர்த்தினி அன்னபூரணி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Update: 2019-09-30 00:33 GMT
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு,  அம்பாள் பர்வதவர்த்தினி அன்னபூரணி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. 

திருவானைக்காவல் - கொலு மண்டபத்தில் அகிலாண்டேஸ்வரி



திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. சர்வ அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் வீற்றிருந்த அம்மன், ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கும்பேஸ்வரர் கோவிலில் கொலு கண்காட்சி 

கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலில்  பாரம்பரிய கொலு கண்காட்சி  தொடங்கியுள்ளது. அம்பாள் மங்களாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள,  நேர் எதிரே ராஜ தர்பார் அலங்காரத்தில் பழங்கால மன்னர்கள் சபையை தத்துரூபமாக வடிவமைத்திருந்தனர்.

நவராத்திரி விழா - பரதநாட்டிய நிகழ்ச்சி

ஒசூரில் கல்யாண காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் பெங்களுர், தும்கூர் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவிகள் குழுவினர் பரதநாட்டியம் ஆடினர்.

நவராத்திரி விழா -  நாட்டியாஞ்சலி 

பொன்னேரி ஆனந்தவல்லி அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நவராத்திரி கொலு - மாணவிகள் கலை நிகழ்ச்சி

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் கொலு கண்காட்சி நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்ட பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மாணவிகள் ஆர்வமுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

திசையன்விளை  - 1008 திருவிளக்கு பூஜை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே புளியடி முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 1008 பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்