தேர்தல் நடத்தை விதிமீறல் - அதிமுக மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதியை அதிமுக மீறியதாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதியை அதிமுக மீறியதாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அமைய ஆணையிட்டதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும் என கூறி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமிடம், திமுக எம்பியும், வழக்கறிஞருமான வில்சன் புகார் மனு அளித்துள்ளார்.