எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பேராசிரியர்கள் நியமன வழக்கு : நடவடிக்கை எடுக்க யுஜிசி, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கு உத்தரவு
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில், பேராசிரியர்கள் நியமனத்தின்போது, யுஜிசி விதிகளை பின்பற்றி, தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
நெல்லையை சேர்ந்த வெங்கட்ராமன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவிப்பு பெற்ற மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களில், யுஜிசி விதிகளை பின்பற்றி பேராசிரியர் பணி நியமனங்கள் செய்யப்படுவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். எம் .சுப்ரமணியம், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவிப்பு பெற்ற மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் யுஜிசி விதிகளை பின்பற்றி பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவிட்டதுடன், தேவையான நடவடிக்கை எடுக்க யுஜிசிக்கும், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டார்.