கவுல் பஜார்-கெருகம்பாக்கம் பாலம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கெருகம்பாக்கம், கவுல்பஜார் இடையே அடையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-25 09:54 GMT
தாம்பரம் கவுல்பஜார்-கெருகம்பாக்கம் இடையே அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மழை வெள்ள காலங்களில் நீரில் மூழ்கி விடுகின்றன. அப்பகுதி மக்களின் நலன் கருதி அங்கு 6 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1,000 சதுர மீட்டர் நிலத்திற்காக 6 ஆண்டுகளாக இந்த மேம்பாலம் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் தீர்ப்பான நிலையில், கடந்த ஓராண்டாக கட்டுமான பணி நடைபெறுகிறது. ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்