அதிமுக நேர்காணல் : "வேட்பாளர் இன்னும் இறுதியாகவில்லை" - முதல்வர் விளக்கம்

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்த பிரமுகர்களிடம் அதிமுக உயர்மட்டக்குழு, நேர்காணல் நடத்தியது.

Update: 2019-09-24 03:49 GMT
சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி - காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிட, மொத்தம் 90 பேர் விருப்ப மனு அளித்த நிலையில், அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர் அறிவிப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது,  வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்