"அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறதா?" - மின் உற்பத்தி பகிர்மான கழகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்திற்கு எதிராக தமிழ்நாடு நூற்பாலை சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதானி நிறுவனத்திடம் ஒரு யூனிட் 7 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள அரசு, 2 ரூபாய்க்கு வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யாமல் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம், அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்கிறதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது என்பது குறித்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.