நெல்லை மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரம்
நெல்லை மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக 10 பறக்கும் படையும் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாங்குநேரி தொகுதிக்கு என பிரத்யேகமாக 3 பறக்கும் படை கூடுதலாக அமைக்கப்பட்டு தொகுதிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.