10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோகம் - நண்பனுடன் 'பைக் ரேஸ்' நடத்தியது அம்பலம்

திருப்பூரில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்ட பத்தாம் வகுப்பு மாணவன், தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-09-22 07:43 GMT
திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த ஷாஜகான் என்பவரது 15 வயது மகன் முகமது பாஷித், தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். வெளியில் இருந்து, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த அவர், வீடருகே சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்த மாணவன், முகமது பாஷித்தும், அவனது நண்பனும் பந்தயம் கட்டி பயணித்ததாகவும், ரேஸின் வேகத்தில் வீடருகே வந்தபோது, நிலை தடுமாறி விழுந்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது. மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்