சென்னையில் கடந்த 2 நாட்கள் பெய்த மழை எதிரொலி - நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் பரவலாக உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் பரவலாக உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் தற்போது 5 புள்ளி 5 மீட்டர் வரையிலும்,கொரட்டூரில் 5 மீட்டர் வரையிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 0 புள்ளி 3 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாகவும், குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.