கட்டிட அனுமதி பெறாவிட்டால் வழிபாட்டு தலம் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
கட்டிட அனுமதி பெறாமல் விதி மீறி கட்டப் பட்டு உள்ள பழமையான கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மீது விதிமீறல் நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
கட்டிட அனுமதி பெறாமல் விதி மீறி கட்டப் பட்டு உள்ள பழமையான கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மீது, விதிமீறல் நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் வழிபாட்டு தலங்களுக்கு விதிமீறல் நடவடிக்கையில் இருந்து விதிவிலக்கு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் கிருபாகரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டனர்.