கோவை முஸ்கான் - ரித்திக் கொலை வழக்கு : மனோகரனின் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு
கோவையில் கடந்த 2010 ம் ஆண்டு பள்ளி குழந்தைகள் முஸ்கான் - ரித்திக் இருவரும் கடத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனை, நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கோவையில் கடந்த 2010 ம் ஆண்டு பள்ளி குழந்தைகள் முஸ்கான் - ரித்திக் இருவரும் கடத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனை, நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனோகரன் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ரோகின்டன் ஃ பாலி நரிமன் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனோகரன் தரப்பு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. மனோகரனின் மறு ஆய்வு மனு மீதான விசாரணையை அக்டோபர் 16 ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், வரும் 20 ம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனைக்கு நிறுத்திவைத்து, உத்தரவிட்டனர்.