விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் - நிவாரணத்தை தடுப்பதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு
சேலம் மாவட்டம் பெரியசோரகை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மோட்டார் சைக்கிள் மோதியதால் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் பெரியசோரகை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, மோட்டார் சைக்கிள் மோதியதால் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் நங்கவள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசாமி என்பவர், ஆறுமுகம் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்காத வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகன எண்ணை மாற்றி மாற்றி இரண்டு முறை வழக்குப்பதிவு செய்துள்ள அவர், விபத்தை ஏற்படுத்தியவரிடம் இரு சக்கர வாகனத்தை ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், சிவசாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளருக்கு ஆறுமுகம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.