"நங்காஞ்சி ஆறு சொந்த செலவில் தூர்வாரப்படும்" - தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சவால்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றை தூர்வாரும் பணியை கரூர் எம்.பி. ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றை தூர்வாரும் பணியை கரூர் எம்.பி. ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, தேர்தல் வாக்குறுதியின்படி இந்த பணி தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பே பொதுப் பணித்துறையிடம் அனுமதி கோரியதாகவும், இதுவரை அனுமதி தரவும் இல்லை மறுக்கவும் இல்லை என செந்தில் பாலாஜி தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் நங்காஞ்சி ஆற்றில் இருபது கிலோ மீட்டர் தொலைவுக்கு தூர்வாரி, மக்கள் பயன்பாட்டிற்கு ஆற்றை கொண்டு வருவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, தி.மு.க. அனுமதி கோரினால் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.