ரூ.29.25 லட்சம் மதிப்பில் 5 இடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

மாநில நெடுஞ்சாலை 67-ல் கரூர் மாவட்டத்தில் 5 பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள் நேற்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

Update: 2019-09-14 23:34 GMT
மாநில நெடுஞ்சாலை 67-ல் கரூர் மாவட்டத்தில் 5 பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள் நேற்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. விபத்துக்களை தடுக்க அமைக்கப்பட்ட இந்த விளக்குகளை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து 29 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இந்த விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக சாலை விபத்துகள் வெகுவாக குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சாலை பாதுகாப்பு நிதியை 65 கோடி ரூபாயாக உயர்த்தி  முதலமைச்சர் வழங்கி உள்ளதாகவும், இதன் மூலம், விபத்து நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு உயர்மின் கோபுரவிளக்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த  அமைச்சர் விஜயபாஸ்கர், 2020ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்