"ஸ்டாலினை குறை கூறும் தகுதி அமைச்சர் சம்பத்துக்கு இல்லை" - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து
அறியாமை இருளில் அமைச்சர் எம்.சி. சம்பத் மூழ்கிக் கிடப்பதாகவும், திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி சுட்டு விரலை நீட்டும் தகுதி அவருக்கு இல்லை என்றும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அறியாமை இருளில் அமைச்சர் எம்.சி. சம்பத் மூழ்கிக் கிடப்பதாகவும், திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி சுட்டு விரலை நீட்டும் தகுதி அவருக்கு இல்லை என்றும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டாலினின் கேள்விக்கு, பதில் கூறாமல், வெற்று கூச்சல் போடுவதாக கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 147 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்று கூட இன்னும் அமலுக்கு வரவில்லை" என்று அதிமுக அரசின் கொள்கை விளக்க குறிப்பின் பக்கம் 18இல் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ள அவர், 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முகத்திரையை அந்த தகவல்களே கிழித்து தொங்க விட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.