பி.எச்.பாண்டியனை சந்தித்தார் துணை முதல்வர்
அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10ஆம் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10ஆம் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய கோளாறு காரணமாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிஎச்.பாண்டியனை நேரில் சந்தித்து உடல் நலத்தை விசாரித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.